தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு !

Tn news: சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் புதிய இயக்குனர்

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இன்று முதல் 30ம் தேதி வரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றும் சென்னையைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நாளை மற்றும் நாளை மறு நாள், வடகிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளிலும், வருகின்ற 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில், வட மேற்கு வங்க கடல் பகுதிகளிலும் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மேற்குறிப்பிட்ட தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.