இளமையான தோற்றம் பெற தூங்க செல்லும் முன்பு இதை ட்ரை பண்ணுங்க !

சருமத்தை அழகாக பராமரிக்க பகலில் மட்டும் பராமரித்தல் போதாது இரவிலும் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.இரவு தூங்க செல்லும் முன்பு முகம் மற்றும் கை,கால்களை சுத்தமாக கழுவிய பின்பு தூங்க செல்ல வேண்டும்.

இரவு தூங்க செல்லும் முன்பு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவிய பின்பு முகத்தில் வறட்சி இல்லாமல் இருக்க சருமத்துக்கேற்ற மாய்சுரைசர், அல்லது எண்ணெய் ஏதேனும் ஒன்றை உங்கள் சருமத்துக்கேற்றதை பயன்படுத்தலாம்.

மேலும் முகம் கழுவிய பின்பு ஒரு நல்ல மசாஜ் முகத்திற்கு குடுக்கலாம்.இதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் அதனுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும்.