சபரிமலையில் பக்தர்களை அனுமதிக்க முடிவு – கேரள அரசு !

கரோனா தொற்று காரணமாக புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் 7 மாதங்கள் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை திக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் மாசி மாத பூஜைகளுக்குப் பக்தர்களுக்குத் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் தினமும் 15 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேரள அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளது.இந்நிலையில் இந்த கோரிக்கை அரசால் ஏற்கப்பட மாட்டாது என்றே கூறப்படுகிறது.

கேரளாவில் தற்போது தொற்று பரவல் க இருப்பதால் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடியாது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மேலும் இந்த சூழலில் தினமும் அதிகபட்சமாக 5 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற செய்தி வெளியாகியுள்ளது.