உடலுக்கு நன்மை தரும் வால்நட்ஸ் மறக்காமல் சாப்பிடுங்கள் !

இன்றைய காலகட்டத்தில் நட்ஸ் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.இதில் நமது உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் இருக்கின்றது.மேலும் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது.தினமும் சிறிய அளவில் உணவில் சேர்த்துக்கொண்டால் போதுமானது.

வால்நட்ஸில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், நார்ச்சத்துக்களுடன், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்றவைகளும் உள்ளது. மேலும் இதில் இதில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளது.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஸ்நாக்ஸாக வால்நட்ஸை சாப்பிடுங்கள். வால்நட்ஸில் உள்ள பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதுடன், கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டத்தையும் குறைக்கும்.

இதை உட்கொள்வது மூலம் மெலடோனின் இரத்த அளவை அதிகரிக்கிறது. இதனால் இது தூக்கத்தைத் தூண்டுகிறது. இது தூக்கத்தை மேம்படுத்த ஒரு சிறந்த வழியாகும் என்று சொல்லப்படுகிறது.