கரோனா தொற்று பரவல் மீண்டும் பரவ தொடங்கி உள்ளது.இதற்கு காரணம் மக்கள் முகக்கவசம் மற்றும் தனிமனித இடைவேளை இவைகளை முறையாக கடைபிடிக்காத காரணம் தான் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போது இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் கரோனா தொற்று பரவல் வேகமாக இருக்கிறது அதனால் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வா் உத்தவ் தாக்கரே கூறினாா்.
மகாராஷ்டிரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு நாளில் புதிதாக 36,902 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில், வணிக வளாகங்கள் இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.
கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்றாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டமில்லை என்றும் தெரிவித்தார்.



