இனி இந்த வங்கிகளின் காசோலைகள் செல்லாது !

nationwide bank strike
வங்கிகள் வேலைநிறுத்தம்

சில நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை வங்கிகளை ஒரு பொதுத்துறை வங்கியுடன் இணைக்கும் வேலையை மத்திய அரசு மேற்கொண்டது. அதன்படி, எட்டு பொதுத்துறை வங்கிகள், நல்ல முறையில் இயங்கும் சில பொதுத்துறை வங்கிகளுடன் இரண்டு இரண்டாக பிரித்து இணைக்கப்பட்டது.

அவைகள், தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திரா வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் வங்கி, யுனைடெட் பேங்க், சிண்டிகேட் வங்கி, அலகாபாத் வங்கி ஆகிய எட்டு வங்கிகள் ஏற்கனவே ஒரு சில வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,வங்கிகள் இணைக்கப்பட்டாலும், அதன் பெயரும், காசோலையும் மாறாமல் இருந்து வந்த நிலையில், தற்போது இந்த எட்டு வங்கிகளின் பழைய காசோலைகள் மார்ச் 31ஆம் தேதி வரை தான் செல்லும் என்றும் ஏப்ரல் 1 முதல் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கண்ட வங்கிகள் எந்த வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளதோ, அந்த வங்கி காசோலையை பெற்றுக் கொள்ளுமாறு வாடிக்கையாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.