இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் !

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள் தோறும் உயர்ந்து கொண்டே இருக்கிறது.அதிலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை ஒவ்வொரு நாளும் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதியில் இருந்து பெட்ரோல், டீசல் விலை எந்த மாற்றமும் இல்லாமல் காணப்பட்டது. அப்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 93 ரூபாய் 11 காசுக்கும், டீசல் 86 ரூபாய் 45 காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 34 காசும், டீசல் லிட்டருக்கு 35 காசும் குறைந்துள்ளது.

தற்போது சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி விற்பனையாகிறது. இதன்படி பெட்ரோல் லிட்டர் ரூ.92.77 காசுகளும், டீசல் லிட்டர் ரூ.86.10 காசுகளுக்கும் விற்பனையாகிறது.