இன்று முதல் இரவுநேர ஊரடங்கு – ஆந்திரா !

ரூ.50 லட்சம் நிவாரணம் ஆந்திர அரசு அறிவிப்பு

இந்தியாவில் கரோனா தொற்றி 2ஆவது அலை தொடக்கத்தில் உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் தான் கொரோனா தீவிரமாக இருந்தன. ஆனால் தற்போது அனைத்து மாநிலங்களிலும் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகிறது.

ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 ஆயிரம் பேருக்கும் அதிகமாக கரோனா வைரஸ் பாதிபபு கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பலி 7,500-ஐ தாண்டியுள்ளது.

கரோனா பரவலை தடுக்க ஆந்திரா மாநிலம் முழுவதும் இன்று முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.ஆந்திர மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்து வருகிறது, இதனைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இரவுநேர ஊரடங்கு விதிப்பது என முடிவு எடுக்கப்பட்டதாக துணை முதல்வர் ஏ.கே.கே ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார்.