ஓட்டுநர் உரிமம் பெற புதிய விதிமுறை !

டிரைவிங் லைசென்ஸ் வேண்டுமென்றால் ஆர்டிஓ அலுவலகம் சென்று ஆர்டிஓ அதிகாரி முன் அங்கு இருக்கும் தடத்தில் 8 போட வேண்டும்.அதன் பின்பு ஆவணங்கள் சமர்ப்பிக்க பட்டு ஓட்டுநர் உரிமம் கிடைக்கும்.

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் புதிய விதியிமுறையை அறிவித்துள்ளது.ஜூலை 1ம் தேதி முதல் ஓட்டுநர் உரிமம் பெற அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளில் முறையாகப் பயிற்சியை முடித்தாலே போதுமானது என்று தெரிவித்துள்ளது.

இந்த மையங்களில் பயிற்சியாளார்களுக்கு சிறந்த பயிற்சி அளிக்கும் வகையில் பிரத்யேக ஓடுதளங்கள் இருக்கும். இதனால், சிறப்பான பயிற்சி உறுதி செய்யப்படும்.

இத்தகைய அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையத்தில் வெற்றிகரமாக பயிற்சியை முடித்தாலே டிரைவிங் லைசென்ஸ் கிடைத்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.