வேகமெடுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று !

இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பாதிப்பு அதிகரித்து வருவதை தடுக்க மாநில அரசுகள் ஊரடங்கை அறிவித்துள்ளன.மேலும் கொரோனாவின் 3 ம் அலை வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர் அதனை சமாளிக்க அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசுகள் தயாராகின்றனர்.

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்தோருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை போன்ற நோய் தொற்று ஏற்படுவது கண்டறியப்பட்டது.

தற்போது இந்த கருப்பு பூஞ்சையின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.இந்த நோய்க்கு இதுவரை 31 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 3 வாரங்களில் மட்டும் கருப்பு பூஞ்சை பாதிப்பு 150 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிரவில்தான் கருப்புப் பூஞ்சையால் 7,057 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் கருப்பு பூஞ்சைக்கு பலியானவர்கள் 2,109 பேர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.