கரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை தாக்கி வருகிறது.பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது.
உடற்பயிற்சிக்கூடங்கள், கேளிக்கைக்கூடங்கள், மதுபான பார்கள், பெரிய அரங்குகள் அணைத்து மூடப்பட்டன.அழகு நிலையங்கள், சலூன்கள் இயங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டல்கள், தேநீர் கடைகளில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஊடகம், பத்திரிகை உள்பட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் புதுவை அரசின் மறுஉத்தரவு வரும் வரையில் இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.



