தடுப்பூசிக்கான மூல பொருட்கள் அனுப்பபடும் – அமெரிக்கா !

கரோனா தொற்றின் இரண்டாம் அலையால் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.மக்களுக்கு தடுப்பூசி அளிக்க அரசு செயல்பட்டுவருகிறது.இந்நிலையில்,தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கு தடுப்பூசி மூல மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.

இது தொடர்பாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை தொடர்பு கொண்டு பேசியது,இந்த சூழலில் கரோனா பரிசோதனை உபகரணங்கள், வென்டிலேட்டர்கள், பிபிஇ கவச உடைகள் ஆகியவற்றை இந்தியாவுக்கு உடனடியாகக் கிடைக்க உரிய ஏற்பாடுகளை செய்யப்படும் என்று தெரிவித்தார்.

ஆக்சிஜன் தயாரிப்பு உபகரணங்களையும்,கோவிஷீல்டு தயாரிப்பதற்கான மருந்து மூலப் பொருட்களை சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்துக்கு அளிக்க அமெரிக்கா முன்வந்துள்ளது என்று தெரியப்படுகிறது.