கரோனா தொற்றால் அதிக அளவு பாதிக்கப்பட்ட ரயில்வே ஊழியர்கள் !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை இந்தியாவை வாட்டி வருகிறது.பல மாநிலங்களில் ஊரடங்கு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக கடைபிடிக்கப்படுகின்றன.

இந்நிலையில் ரயில்வே ஊழியர்கள் 93 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட் டிருப்பதாக ரயில்வே வாரியத் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான சுனீத் சர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து ரயில்வே நடத்தி வரும் 72 மருத்துவமனைகளில் 5 ஆயிரம் படுக்கை வசதிகள் ஊழியர்களுக்காகத் தயார் செய்யப்பட்டுள்ளன.அவர்களுக்கு தேவையான சிகிச்சையை ரயில்வே வழங்கும்.

மேலும் ரயில்வேயில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் பராமரிப்பாளர்கள், டிரைவர்கள், பரிசோதகர்கள், ரயில்வே நிலைய ஊழியர்களுக்கு அடிக்கடி மருத்துவப் பரிசோதனையை நடத்தி வருகிறோம் என்று கூறினார்.