7ஆம் கட்ட வாக்குப்பதிவு – மேற்கு வங்கம் !

மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்ததை தொடர்ந்து 6 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளன. தேர்தல் நேரத்தில் வன்முறைகள், துப்பாக்கிச்சூடு, கொலை என அனைத்தும் நடை பெற்றது.

இன்று 7ஆம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது.இன்று 36தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு தொகுதிகளின் வேட்பாளர்கள் இறந்துவிட்டதால், 34 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மற்ற இரண்டு தொகுதிகளுக்கு மே 16ஆம் தேதி தேர்தல் நடத்தி மே 19ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.மேலும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தலுக்காக 12,068 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.