தமிழகத்தில் மீண்டும் கரோனா கால கட்டுப்பாடுகள் !

கரோனா தொற்று மீண்டும் பரவ தொடங்கிய நிலையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன.மக்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவேளை இவைகளை பின்பற்றுமாறு அரசு கூறிவருகிறது.

தற்போது இருக்கும் நிலையில்,மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.வரும் 10ம் தேதி முதல்‌ கோயம்பேடு வணிக வளாகத்தில்‌ செயல்படும்‌ சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள்‌ மட்டும்‌ செயல்பட தடை விதிக்கப்படுகிறது.

மேலும் மற்ற மாவட்டங்களில்‌ உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில்‌ சில்லரை வியாபார கடைகளுக்கு
தடை விதிக்கப்படுகிறது.

ஓட்டல்கள், திரையரங்குகளில் 50 % இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.பொழுது போக்கு பூங்காக்கள், பெரிய அரங்குகள்‌, உயிரியியல்‌ பூங்காக்கள்‌, அருங்காட்சியகங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ இடங்கள்‌ 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌ என்று அறிவித்துள்ளது.