கரோனா பரவுவதை தடுக்க மீண்டும் கெடுபிடி – மகாராஷ்டிரா !

கரோனா தொற்றின் இரண்டாம் அலை மீண்டும் வர தொடங்கி உள்ளது.இந்த கரோனா தொற்று அதிகம் இருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் தான்.

மேலும் பெருகும் கரோனா தொற்றை கருத்தில் கொண்டு தனியார் அலுவலகங்கள், சினிமா அரங்குகள் மற்றும் ஆடிட்டோரியங்கள் செயல்பட மகாராஷ்டிரா அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

தனியார் அலுவலகங்களும் 50 சதவீத ஊழியர்களுடன் மட்டும் செயல்படுமாறு மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும் ஆடிட்டோரியங்கள் 50% இருக்கைகளுடன் இயங்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளன.

மேலும் முககவசம் இல்லாதவர்கள் வளாகத்திற்குள் நுழைவதைத் தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.