மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.மேலும் இம்மாதத்தில் மேற்கு வங்கத்தில் தேர்தல் 8 கட்டமாக நடைபெறவுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் கட்சி.இதை இந்த முறை கைப்பற்றிவிடவேண்டும் என்று பாஜக முன்னைப்புடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில்,சவுரங்கி தொகுதியில் மறைந்த காங்கிரஸ் தலைவர் சோமந்திரநாத் மித்ராவின் மனைவி சீகா மித்ரா சவுத்திரி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்திருந்தது. ஆனால், அவர் அதை மறுத்துள்ளார். என்னிடம் ஆலோசிக்காமல் என்னை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.
மேலும் , காசிப்பூர் பெல்காச்சியா தொகுதியில் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தருண் சகாவும் தான் பாஜகவில் சேரவே இல்லை என்றும் தன்னிடம் கேட்காமல் வேட்பாளராக அறிவித்துள்ளனர். அவரும் போட்டியிட மறுத்துள்ளார்.
எனவே மேற்கு வங்கத்தில் பாஜக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட 2 பேர் போட்டியிட மறுத்துள்ளனர்.



