பிரிட்டன் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது – தமிழகம் !

கரோனா தொற்று எண்ணிக்கை தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு மக்களுக்கு கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துகிறது.இந்த நிலையில்,தமிழகத்தில் 29 பேருக்கு பிரிட்டன் உருமாறிய கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு உருமாற்ற கரோனா மற்றும் இரட்டை உருமாற்ற கரோனா இவைகளுக்கு கோவாக்சின் நல்ல தீர்வாக இருக்கும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் கூறியுள்ளது.

கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.முகக்கவசம் அணிவதை அரசு கட்டாயமாகியுள்ளது.மீறினால் அபராதம் விதித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 2 டோஸ் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு கரோனா தொற்று அதிகம் பாதிக்காது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.