இந்திய ரூபாய் நோட்டில் நேதாஜியின் படம் !

இந்திய விடுதலை போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இவர் நம் நாட்டிற்காக ஆற்றிய தொண்டு மிக பெரிது.நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உருவப்படத்தை ரூபாய் நோட்டுகளில் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நம் விடுதலைக்காக போராடிய இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜியின் புகைப்படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிட வேண்டுமென்ற குரல்கள் நீண்ட நாட்களாகவே எழுந்து வருகின்றன.மேலும் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில் சுதந்திர தியாகி நேதாஜியின் உருவப்படத்தை ரூபாய் நோட்டில் அச்சிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தேசிய உணர்வை உருவாக்கியதில் நேதாஜியின் பங்கு ஈடு இணையற்றது. அவரது தியாகத்தையும், போராடியவர்களின் தியாகத்தையும் யாரும் புறக்கணித்துவிட முடியாது. மேலும் நீதித்துறை தடைகள் காரணமாக, தங்களால் மனுதாரரின் கோரிக்கையை அமல்படுத்தும் உத்தரவைப் பிறப்பிக்க முடியாதென கூறிய நீதிபதிகள், இதுகுறித்து பரிசீலித்து முடிவெடுக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.