கடைக்கு பொருள்களை வாங்க சென்ற சிறுமி நெடுந்நேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லை. வீட்டில் உள்ளவர்கள் ஒரு ஒரு பக்கமாக சென்று சிறுமியை தேட தொடங்கியுள்ளனர். கடை உரிமையாளரின் மனைவியை விசாரித்த பொழுது சிறுமி இந்த பக்கம் வரவில்லை என்று கூறியுள்ளார்.
எங்கே தேடியும் சிறுமி கிடைக்காததால் போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டது. போலீஸ் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது. சிறுமி கடைசியில் கடைக்கு சென்றதால் கடை உரிமையாளரின் வீட்டில் தேடப்பட்டது.
அப்பொழுது வீட்டின் கூரை மேல் சிறுமி சடலமாக இருந்துள்ளார். போலீஸ் சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் முகத்தில் நக கீறல், ஆடை கிழிந்தும் முடி கலைந்தும் இருந்துள்ளது. பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று ரிப்போர்ட் வந்துள்ளது.
இதையடுத்து கடை உரிமையாளர், அவரது மனைவி இருவரும் தலைமறைவு ஆகிவிட்டனர்.போலீஸ் அவர்கள் மேல் வழக்கு பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.



