மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வுத் தேதி அறிவிப்பு !

தமிழக உள்பட பல்வேறு மாநிலங்களில் இன்றளவும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பே நிலவி வருகிறது.இந்த நிலையில், 2021ஆம் ஆண்டுக்கான மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.

ஆங்கிலம், ஹிந்தி உள்பட 11 மொழிகளில் நீட் தேர்வானது எழுதும் முறையில் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மற்றொரு அதிர்ச்சிகரமான அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, இந்த ஆண்டு முதல் B.SC Nursing, B.SC life science படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு கட்டாயம் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.