செப்டம்பர் 5ம் தேதி நீட் தேர்வு !

நீட் தேர்வு வேண்டுமா வேண்டாமா என்று சர்ச்சை ஒரு பக்கம் இருக்க.2021ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நேரடியாக நடத்தப்படும் என்று தேசியத் தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்) அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நீட் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு செப்டம்பர் 5-ம் தேதி நடத்தப்படும். பேனா, காகித முறையில் இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு,வயது வரம்பு,தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விபரங்களை அறிய https://ntaneet.nic.in/ என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.