பிரபல ஹிந்தி நடிகர் திலீப்குமார் காலமானார் !

பிரபல ஹிந்தி நடிகர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 98.திலீப் குமார் கடந்த 1944ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி தேவதாஸ், கங்கா யமுனா, ஆன், தஸ்தான் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலீப்குமார் வீடு திரும்பிய நிலையில் அவர் காலமாகியுள்ளார்.

பத்ம பூஷன், பத்ம விபூஷன் என்று இந்தியாவின் உயரிய விருதுகள் பெற்றுள்ள இவர் இந்திய திரை உலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994 பெற்றுள்ளார்.

இவருக்கு பல்வேறு நடிகர்,நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.திலீப்குமார் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.