இந்தியாவிற்கு தங்கத்தை வென்று கொடுத்துள்ளார் நீரஜ் சோப்ரா !

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் படைப்பெற்று வருகின்றது.ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்திற்கு எறிந்து தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

இவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.இவரது தந்தை விவசாயி.விவசாயியின் மகன், தடகள உலகை திகைக்க வைப்பதற்காகவும், ஒலிம்பிக்கில் இந்தியாவின் 100 ஆண்டு காத்திருப்பை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார்.

சோப்ரா இந்த ஒலிம்பிக்கில் நம் நாட்டிற்கு 7 வது பதக்கத்தையும் முதல் தங்கத்தையும் வென்றுள்ளார்.நீரஜ் சோப்ராவுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு 2 வெள்ளி, 4 வெண்கலம் ,1 தங்கம் என 7 பதக்கங்கள் கிடைத்துள்ளது.