தளபதியின் பீஸ்ட் படத்தில் இணைத்த செல்வராகவன்!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் பீஸ்ட்.இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.தற்போது இந்த படத்தில் இயக்குநர் செல்வராகவன் இணைந்துள்ளார் என சன் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் சாணிக் காயிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகவுள்ள இயக்குநர் செல்வராகவன் அடுத்ததாக தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்திலும் இணைந்துள்ளார்.