உலக இரட்டையர்கள் தினம்

இன்று (ஆகஸ்ட் 8) உலக இரட்டையர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தாயின் வயிற்றில் இரட்டை குழந்தை எப்படி உண்டாகிறது தெரியுமா?

ஒரு பெண் கருவுறும்போது போது, ஆண்களிடம் இருந்து வரும் ஆயிரக்கணக்கான விந்து செல்களில் ஒரு விந்து செல் மட்டும் பெண்ணின் கருப்பையில் உள்ள அண்டத்துடன் இணைந்து கருமுட்டையை மாறுகிறது. இந்த கருமுட்டையானது மொருலா என அழைக்கப்படுகிறது.

இந்த மெருளாவில்தான் குழந்தையின் உடல் வளர்ச்சிபெற தொடங்குகிறது. ஒருவேளை, மெருளா அதன் வளர்ச்சிக்கு முன்பாகவே இரண்டாகப் பிரிந்தால், பிரிந்த இரண்டு மொருலாக்களும் இரண்டு குழந்தைகளின் உடலாக, தனித்தனியே வளர்ச்சிபெறத் தொடங்குகிறது. இப்படித்தான் இரட்டை குழந்தை பிறக்கிறது.