தேசிய பாதுகாப்பு சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை – மத்திய இணையமைச்சர்

தேசிய பாதுகாப்பு சட்டத்தை நீக்கும் எண்ணம் இல்லை என மத்திய இணையமைச்சர் கிரண் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய இணையமைச்சர் , கடந்த 5 ஆண்டுகளில் டெல்லியில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார்.

மேலும் இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை, 34 பாதுகாப்புப்படை வீரர்கள், 54 இடதுசாரி பயங்கரவாதிகள் மற்றும் பொதுமக்களில் 68 பேர், பல்வேறு தாக்குதல்களில் சிக்கி உயிரிழந்திருப்பதாக தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஓராண்டில், பயங்கரவாத தாக்குதல்களுக்கு 49 பாதுகாப்புப் படை வீரர்களும், 45 பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாக கிஷன் ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.