அசுரன் மற்றும் ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது !

2019ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இந்த விருதுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று இயக்குநர் ஷாஷி என். கருன் தேசிய விருதுகளை அறிவித்தார்.சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது தனுஷுக்கு கிடைத்துள்ளது. இதேபோல் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படம் 2 தேசிய விருதுகளை குவித்துள்ளது. சிறந்த ஒலிகலவை மற்றும் சிறந்த ஜூரிக்கான விருதுகளை பெற்றுள்ளது.