கரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது.இந்த பரவல் மீண்டும் வருவதற்கு காரணம் தனிநபர் இடைவேளை மற்றும் முகக்கவசம் இந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றாதது தான் காரணம் என்று தெரிவிக்கின்றனர்.
தற்போது மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகம் ஆகியுள்ளது.
இதனால் மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் மாநிலங்களில் மறுபடியும் ஊரடங்கு மத்திய அரசு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மீர், உதய்பூர், சக்வாரா, கோட்டா, குஷல் கார் நகரங்களில் இன்று முதல் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாநகராட்சிகளிலும் இரவு 10 மணி வரை மட்டுமே சந்தைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



