செவ்வாய் செல்லும் விண்வெளி வீரர்களுக்கு உணவை கண்டுபிடித்தால் – அமெரிக்கா பரிசு !

அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆய்வு மையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.அது என்ன வென்றால் செவ்வாய் கிரகத்திற்கு பயணம் செல்லும் விண்வெளிவீரர்களுக்கு பொருத்தமான உணவையும் மேலும் அதை தயாரிக்கும் முறைகளையும் கண்டுபிடித்து கூறினால் 5 லட்சம் டாலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்குகொள்ள வரும் மே மாதம் 28 தேதிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும்.மேலும் ஜூலை மாதத்திற்குள் தங்களது கண்டுபிடிப்பு விபரங்களை அனுப்பவேண்டும் என்று தெரிவிக்க பட்டுள்ளது.

மேலும் இதில் அமெரிக்கர்கள் மட்டும் தன் கலந்து கொள்ள வேண்டும்.பிற நாடுகளை சேர்ந்த நபர்களும் பங்கு கொள்ளலாம் ஆனால் பரிசு தொகை கிடையாது என்று அறிவிக்க பட்டுள்ளது.