நாக பஞ்சமி அன்று எவ்வாறு வழிபடுவது !

ஆடி மாதத்தில் வரும் சுக்லா பக்ஷா அன்று நாக பஞ்சமி விழா கொண்டாடப்படுகிறது.இன்று நாக தேவதையை வழிபடுவது மிக சிறப்பு.ஒருவர் ஜாதகத்தில் நாக தோஷம் இருக்குமாயின் இன்று நாக தேவதையை வழிபடுவது மிக சிறப்பு.

மேலும் திருமணம் ,குழந்தை பாக்கியம் போன்றவைகள் தள்ளி போனால் இன்று ஆலயம் சென்று நாக தேவதையை வழிபடுவதன் மூலமாக நம் வாழ்வில் இருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி சிறப்பாக இருக்கலாம்.

இந்நாளில் விடியற்காலையில் நீராடி, தூய ஆடை அணிந்து,ஆலய வளாகங்களிலோ, உள்ள கல் நாகர் திருமேனிகள் பசும்பாலால் அபிஷேகம் செய்து, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாற்றி, தூப தீபாராதனை செய்து வழிபடுவர்.

இந்த ஊரடங்கு காலத்தில் கோவில்களுக்கு செல்ல முடியவில்லை என்றால் வீட்டில் இருக்கும் செம்பு அல்லது வெள்ளி பாம்பு சிலை இருக்குமாயின் அதற்கு இந்த வழிபாட்டை செய்யலாம்.இது போன்ற சிலை அல்லது படங்கள் இல்லையென்றாலும் வேறு எந்த இறைவன் புகைப்படம் இருக்குமாயின் அதற்கு பால் நெய்வேத்யம் வைத்து வழிபடலாம்.பிணிகள், பிரச்சினைகள் மற்றும் கஷ்டங்கள் அனைத்தும் பறந்து போகும் என்பது நம்பிக்கை.