தசரா திருவிழாவில் பங்கேற்கும் யானைகளுக்கு பூஜை – மாவட்ட கலெக்டர் பங்கேற்பு

ஆண்டுதோறும் மைசூர் தசரா என்றால் உலகம் முழுவதும் புகழ் பெற்றது  ஆகும். தசரா திருவிழாவில் பார்ப்பதற்கு மைசூருக்கு பல்வேறு மாநிலத்தில்   இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும்  தசரா விழாவிற்கு லட்சக்கணக்கானோர் வந்து சுமார் 10 நாட்கள் காலம் தசரா விழாவில் கலந்து கொள்வார்கள்.

ஆனால் இந்தாண்டு கொரனா தொற்றின் காரணமாக உலகப் புகழ் பெற்ற தசரா பண்டிகை எளிமையான முறையில் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ள நிலையில் இன்று அபிமன்யு தலைமையில் யானைகளுக்கு மைசூர் மாவட்டம் வீரன ஹொசஹல்லியில்  உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாவட்ட கலெக்டர் ஆகிய ரோஹினி சிந்தூரி பூஜைகள் செய்து துவக்கி வைத்தார்.

 இந்த ஆண்டு குறிப்பாக ஐந்து யானைகள் மட்டும் கலந்து கொள்கின்றனர் அபிமன்யு 50வயது விஜய் 61 காவேரி 42 கோபி 38 விக்கிரமா 47 ஆகிய ஐந்து யானைகள் மட்டும் வீரன ஹோசஹல்லி யில் இருந்து இன்று மைசூர் நோக்கி புறப்பட்டது.

இந்த பூஜையின் போது மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரி பாரதி மாவட்ட வனத்துறை உயர் அதிகாரி அலெக்சாண்டர் ஆகியோர் உடன் இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here