தமிழகத்தில் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் மேலும் 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 6,03,290-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 5,47,335 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மட்டும் 5,516 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 66 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் பலி எண்ணிக்கை 9,586-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1289 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 168689 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 74,41,697 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இன்று மட்டும் 87,647 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 187 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 31 திருநங்கைக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றைக்கு திருநங்கை யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.