மீண்டும் முதலிடம் பிடித்தார் முகேஷ் அம்பானி !

ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் என்ற இடத்தை மீண்டும் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.கடந்த ஒருவார காலமாக உலக நாடுகளில் பங்குச்சந்தை வர்த்தகம் பெரிய அளவிலான மாற்றங்களையும் பாதிப்புகளையும் எதிர்கொண்ட நிலையில் பல முக்கியமான நிறுவனங்களின் பங்கு மதிப்பு பெரிய அளவிலான சரிவை எதிர்கொண்டு உள்ளது.

இதுவரை இந்த இடத்தில் இருந்த சீனாவின் வாட்டர் பாட்டில் வர்த்தகர் ஜாங்க் ஷான்ஷானின் இந்த வர வர்த்தகத்தில் 20 % இழப்பு ஏற்பட்டது.இதனால் இவரது சொத்து மதிப்பு 22 பில்லியன் டாலர் குறைந்துள்ளது.

இந்நிலையில் ரிலையன்ஸ் பங்குகள் பெரிய அளவிலான சரிவை கடந்த வாரம் எதிர்கொள்ளவில்லை.இதனால் 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி மீண்டும் ஆசியப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.