முகேஷ் அம்பானி பொது முடக்கம் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ.90 கோடி சம்பாதித்துள்ளார்.
இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி பொது முடக்கம் தொடங்கிய மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ரூ .90 கோடி சம்பாதித்துள்ளார் என்று ஐஐஎஃப்எல் வெல்த் மற்றும் ஹுருன் இந்தியா இணைந்து வெளியிட்ட இந்தியப் பணக்காரர்களின் பட்டியல் 2020-இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆண்டு அறிக்கையின்படி, அம்பானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ரூ .2,77,700 கோடியிலிருந்து ரூ .6,58,400 கோடியாக அதிகரித்துள்ளது. இந்திய பணக்காரர் பட்டியலில் கடந்த 9 ஆண்டுகளாக முதலிடத்தை தக்க வைத்து கொண்டு வருகிறார் முகேஷ் அம்பானி.