Lockdown restriction in puducherry : புதுச்சேரியில் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு !

puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு
puducherry updates : மீண்டும் பள்ளிகள் திறப்பு

Lockdown restriction in puducherry : கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது.

புதிய கொரோனா மாறுபாடான ஓமிக்ரான் மாறுபாட்டைக் கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன.ஓமிக்ரான் கோவிட்-19 மாறுபாடு, கொரோனா வைரஸின் மிக மோசமான ஒன்று என்று தெரிவித்துள்ளனர்.

தற்போது பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.Lockdown restriction in puducherry

இந்நிலையில் இன்று புதுவை அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.அதன்படி, புதுச்சேரியில் உள்ள வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், பார்கள், கலையரங்கம் உள்ளிட்ட இடங்களில் 50 விழுக்காடு பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

அதே சமயம் வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வருவோர் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தால் மட்டுமே அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

வெளி மாநிலங்களிலிருந்து புதுச்சேரிக்கு வரும் வாகனங்களில் 50 விழுக்காடு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : RIP lyricist kamakodiyan : பாடலாசிரியர் காமகோடியன் காலமானார் !