வரை இறுதி நாளான ஞாயிறுதோறும் 419 மின் ரயில்கள் இயக்கம் !

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 10 ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது தொற்று குறையத்தொடங்கியதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5 வரை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைதோறும் 419 மின்சார ரயில்கள்இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ,சென்னைரயில் கோட்டம் கூறுவது,ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், பல்வேறு தரப்பு மக்களும் பணிக்கு சென்று திரும்புகின்றனர்.

இன்றுமுதல் இனி வரும் ஞாயிறுகளில் 419 மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதாவது, சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் 149, கும்மிடிப்பூண்டி -66, சென்னை கடற்கரை – செங்கல்பட்டு 138, வேளச்சேரி – 50 இதுதவிர, ஆவடி, பட்டாபிராம் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் இ டிப்போ 16 மின்சார ரயில்களும் இயக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.