இயக்குனர் சங்கர் மகளின் திருமண கொண்டாட்டம் !

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயர் பெற்றவர் சங்கர்.இவரது மகள் திருமணம் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது.

இவரது மகள் ஐஸ்வர்யா ஷங்கர் – மணமகன் ரோஹித் தாமோதரன் மகள் திருமணத்திற்காக பிரமாண்ட செட் அமைத்திருக்கிறார் சங்கர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக மணமகன் மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், சுகாதாரத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன், நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.