‘த்ரிஷ்யம் 2’ டீசர் வெளியாகும் தேதி!!!

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘த்ரிஷ்யம் 2’ படத்தின் டீசர் வெளியாகும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

த்ரிஷ்யம்’ படத்தின் தொடர்ச்சியாகவும் முதல் பாகத்தில், ஜார்ஜ் குட்டியின் (மோகன்லால்) குடும்பமான மீனா, எஸ்தர் உள்ளிட்டோர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். ‘த்ரிஷ்யம்’ முதல் பாகம் எடுக்கப்பட்ட தொடுபுழாவில் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் தொடங்கியது.

சமீபத்தில் இந்த படத்தின்படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இந்நிலையில் த்ரிஷ்யம் வெளியாகி இன்றுடன் ஏழு வருடங்கள் ஆன நிலையில், மோகன்லால் த்ரிஷ்யம் 2 படத்தின் டீசர் ஜனவரி 1ஆம் தேதி வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக தெரிவித்துள்ளார்.