முதலமைச்சர் வேட்பாளரை பா.ஜ.க தான் முடிவு செய்யும் – எல்.முருகன்

பாஜக தலைமைதான் முதல்வர் வேட்பாளரை முடிவுசெய்யும் என்று அரியலூரில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பேட்டியளித்துள்ளார்.

எல்.முருகன் அரியலூர் மாவட்டம் தா.பழூரில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி படுதோல்வி அடையும் என கூறினார். அதிமுக, பாஜக கூட்டணியில் யாருடைய தலைமையில் சட்டமன்றத் தேர்தலை சந்திப்பது என்பதையும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.