மு.க.ஸ்டாலின் இன்று 10 மணிக்கு அறிவிக்கப்போவது என்ன?

திமுகவின் முக்கிய மற்றும் மூத்த நிர்வாகிகள் 1600 பேர் சுமார் 10 நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் மக்களை வீடுவீடாக சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது கிராமங்களில் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் தீர்மானங்களை நிறைவேற்ற திட்டம் வகுத்துள்ளனர்.

நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை தொடர்ந்து செயல்பட வைக்கும் விதமாக வீடு வீடாக மக்களை சந்திக்கும் திட்டத்தை தொடங்குகின்றனர். இதற்கான அறிவிப்பு இன்று திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்திற்கு பின்னர் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.