எல்.முருகனின் கருத்துக்கு அ.தி.மு.க அன்வர் ராஜா பதிலடி

அதிமுக, பாஜக கூட்டணியில் யாருடைய தலைமையில் சட்டமன்ற தேர்தலை சந்திப்பது என்பதையும், முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பாஜக தலைமை தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்த கருத்துக்கு அன்வர் ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பா.ஜ.க இடம்பெறுமா இல்லையா என்பது குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.