நேற்று முன்தினம் நள்ளிரவில் கரையை கடந்த ‘டவ்தே’ புயலால் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது.குஜராத் மாநிலம் முழுவதும் டவ் தே புயலால் பல பாதிப்புகள் ஏற்பட்டன.
மராட்டியத்தில் மின்கம்பங்கள் சாய்ந்தது மற்றும் மின் கம்பிகள் அறுந்து விழுந்தது தொடர்பாக 46 லட்சத்து 41 ஆயிரம் வீடுகள், நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
குஜராத்தில் 13 பேரை உயிர் பலி வாங்கியுள்ளது. 160 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய சூறைக்காற்றுக்கு பல இடங்களில் 16 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார் மேலும் அங்குள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தவுள்ளார்.



