திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி முதல் தனது நேரடி தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார்.
தொடர்ந்து, ஜனவரி 10ஆம் தேதிக்குள் 16 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்களை நடத்த திமுக திட்டமிட்டுள்ளதாகவும் அக்கட்சி மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் உடனான கூட்டத்தில் பேசிய திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.



