முதல்வர் ஸ்டாலினின் திருமண நாள்

தமிழக முதல்வர் ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் இன்று 46 வது ஆண்டு திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

திமுகவின் தொண்டன், உறுப்பினர், மேயர் ,அமைச்சர், செயல் தலைவர் ,திமுக தலைவர் தற்போது முதல்வர் என படிப்படியாக அரசியல் பயணத்தில் முன்னேறி இருப்பவர் மு.க. ஸ்டாலின். தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் முதல் முறையாக பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த மே 7-ஆம் தேதி ஸ்டாலின் முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என்று சொல்லும்போது அவர் கண்கள் கலங்கியது இல்லையோ அவரது மனைவி துர்கா ஸ்டாலின் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கி வெடித்து அழுதார்.

ஸ்டாலின் வெற்றிக்கு மக்களின் செல்வாக்கு எந்த அளவுக்கு காரணமோ அதே போல் அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மிகப்பெரிய காரணம்