முதல்வர் ஸ்டாலினின் ஆலோசனை கூட்டம் திடீர் ரத்து.. !

தமிழ்நாட்டில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்துவதாக இருந்த நிலையில், அந்த கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது வரும் 23-ம் தேதி காலை காலை 6 மணியுடன் நிறைவுபெறுகிறது… தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களை திறப்பதற்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

இவைகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

காலை 11 மணிக்கு இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் 9ம் வகுப்பு முதல் 12-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.. அதேபோல, 3வது அலை முன்னெச்சரிக்கை தொடர்பாகவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படும், கட்டுப்பாடுகள் அல்லது தளர்வுகள் மேலு அளிக்கப்படுமா என்பது குறித்து தெரியவரும் என்றும் நம்பப்பட்டது.

ஆனால், ஆலோசனை கூட்டம் திடீரென ரத்தாகி உள்ளது. இதற்கான காரணங்கள் உடனடியாக தெரியவில்லை.. எனவே, நாளைய தினம் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்றும் தெரிகிறது… எனவே நாளைதினம் நடக்க இருக்கும் கூட்டத்தில், பள்ளிகள் திறப்பு உட்பட 50 சதவீத ரசிகர்களுடன் தியேட்டர்களை திறப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.