24 காரட் தங்கத்தால் செய்யப்பட்ட ஸ்வீட் !

இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் சூரத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையில் ஒரு கிலோ இனிப்பு ரூபாய் 9000 க்கு விற்பனை செய்கிறது. அப்படி என்ன தான் இதில் உள்ளது என்றால் வழக்கமான இனிப்புகள் அல்ல, இதில் தங்கம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் நெருங்கிவருகிறது.இந்து போன்ற பண்டிகை காலத்தில் ஸ்வீட் கடைகளில் புதுவித உணவுகளை தயாரிப்பது வழக்கம்.அது போல தற்போது சிறப்பு தங்கத்தை பயன்படுத்தி தயார்செய்யப்பட்டுள்ளது இந்த ஸ்வீட்.

மேலும் ரக்ஷா பந்தன் பண்டிகை வரவுள்ளது . இந்த பண்டிகையில் சகோதரிகள், தங்களது சகோதரர்களுக்கு ராக்கி கட்டி, இனிப்பு வழங்கி மிக விமர்சையாக கொண்டாடுவார்கள்.

சூரத்தின் கோடோட் சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு புதிய இனிப்புகள் தயாரிக்கப்படுகின்றன, அதில் இந்த சிறப்பு தங்க இனிப்பும் அடங்கும்.இந்த இனிப்பு தங்க இனிப்புகள் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கிலோ தங்க இனிப்புகளின் விலை ஒன்பதாயிரம் ரூபாய்.இது தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என தெரியவந்துள்ளது.