சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார் சூர்யா !

தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யா முன்னணி நடிகருள் ஒருவர்.இவருக்கென்று தனி ரசிகை,ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.மேலும் நடிகராக மட்டுமில்லாமல் சிறந்த மனிதநேயம் உள்ள மனிதருள் ஒருவர்.

சூர்யா எந்த ஒரு படம் நடித்தாலும் அந்த கதாபாத்திரமாக மாறிவிடுவர்.அந்த வகையில் நந்தா,பிதாமகன்,அயன் போன்ற படங்களில் இவருக்கு நிகர் யாரும் இல்லை என்றும் கூறலாம்.

மேலும் இவரது நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் இந்தியா முழுவதும் பேசப்பட்டது.தற்போது மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் தேர்வாகியிருந்தது.மேலும் இந்த படத்திற்காக சூர்யா சிறந்த நடிகருக்கான விருதை வாங்கியுள்ளார்.இதற்கு அவரது ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.