மிஷன் 200 – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் !

அண்ணா அறிவாலயம் அரங்கில் இன்று திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறுகையில்,நாம்தான் வெற்றி பெறுவோம். ஆனால் அதை சாதாரணமாக வெற்றி அடைய விடமாட்டார்கள்.நாம் வெற்றி பெற்றால் போதும் என்று நினைக்காமல், நம்மை சுற்றி இருப்பவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்க வேண்டும். இந்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றி நாம் ஐந்து முறை ஆட்சி செய்ததைவிட பெரிய வெற்றியாக இருக்கும்.

மத்திய பாஜக, அதிமுக அரசுகள் பண பலம் மற்றும் ஊடகம் மூலம் நம்மை மும்முறையில் தாக்குகின்றனர்.வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்திலிருந்து இருந்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கவுள்ளேன். நமது இலக்கு 200 தொகுதிகளுக்கு மேலான இடங்களை கைப்பற்றுவது “மிஷன் 200” என தெரிவித்தார்.