தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தார் ஸ்டாலின்.முதல்வராக பதவியேற்ற நாளில் இருந்து தமிழக மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துவருகிறார்.
கொரோனா காலத்திலும் தமிழக அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்தது.தற்போது நிலம் இல்லா மக்களுக்கு நிலம் அளிக்கும் மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்துவதற்கான குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த திட்டத்திற்கு குழு அமைத்து நிலமற்ற ஏழைகளை கண்டறிந்து நிலம் வழங்கவும் மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
மேலும் நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் அளிக்கும் பிரதம மந்திரி திட்டத்தை செயல்படுத்தும் விதமாக வருவாய் பேரிடர் மற்றும் மேலாண்மை துறை செயலர் தலைமையில் குழு அமைத்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை செயலர் கோபால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையும் படிங்க : ரசிகர்கள் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 5 ஆரம்பமாகவுள்ளது !



